ADDED : செப் 02, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுாரில் கோவில் வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை சாலை வழியாக நடந்து சென்றது.
குன்னுார் கேத்தி அருகேயுள்ள கெரடா கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் மற்றும் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை உலா வந்தது. தொடர்ந்து சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. மக்கள் கூறுகையில், ‘வளர்ப்பு பிராணிகளை வேட்டையாட அவ்வப்போது வந்து செல்லும் இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவும், இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
