/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாங்க முடியாமல் அவதிப்படும் உள்ளூர் மக்கள் காய்கறி விலை விர்ர்ர்...!மலிவு விலைக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா...?
/
வாங்க முடியாமல் அவதிப்படும் உள்ளூர் மக்கள் காய்கறி விலை விர்ர்ர்...!மலிவு விலைக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா...?
வாங்க முடியாமல் அவதிப்படும் உள்ளூர் மக்கள் காய்கறி விலை விர்ர்ர்...!மலிவு விலைக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா...?
வாங்க முடியாமல் அவதிப்படும் உள்ளூர் மக்கள் காய்கறி விலை விர்ர்ர்...!மலிவு விலைக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா...?
ADDED : ஜூன் 30, 2024 08:54 PM

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வகையான காய்கறி விலையும் இரு மடங்கு உயர்நதுள்ளதால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக, 20 ஆயிரம் ஏக்கரில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், அவரை, பீட்ரூட், வெள்ளை பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தவிர, இங்கிலீஸ் காய்கறிகளும் பயிரிடப்படுகிறது.
நீலகிரியில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகள் மணம், ருசி இருப்பதால், ஊட்டி மார்க்கெட், மேட்டுப்பாளையம் சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் தோட்டங்களிலிருந்து நேரடியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும், பெங்களூரு உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு மொத்த வியாபாரிகள் விலை பேசி, நேரடியாகவும் வாங்கி செல்கின்றனர்.
வரத்து குறைவால் சிக்கல்
மாவட்டத்தில், ஊட்டி, கொல்லிமலை ஓரநள்ளி, கோத்தகிரி, நெடுகுளா, ஈளாடா, கூக்கல்தொரை, எம்.பாலாடா, நஞ்சநாடு, கடநாடு, காரபிள்ளு, தொரைஹட்டி, எப்பநாடு, தேனாடுகம்பை, மீக்கேரி, பாலகொலா, அணிக்கொரை, கப்பச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது.
நடப்பாண்டில் கோடை மழை, 25 செ.மீ., மட்டுமே பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் துவங்கும் தென் மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி, கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. மழையை எதிர்பார்த்து விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள், விவசாயம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் குறைந்தளவில் சாகுபடி செய்தனர்.
இதனால், ஊட்டி மார்க்கெட்டுக்கு சராசரியாக தினமும், 40 டன் அளவுக்கு மலை காய்கறிகள் வரவேண்டி நிலையில், இரு மாதங்களாக, 20 டன் அளவுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் பிற மாவட்டத்திலிருந்து ஊட்டி மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. விலை மட்டும் அதிகரித்துள்ளது.
இரு மடங்கு விலை உயர்வு:
அதில், ஊட்டி வெள்ளை பூண்டு, 500 ரூபாய்; முருங்கைகாய், 240; உருளை கிழங்கு, 130;சின்ன வெங்காயம், 100, தக்காளி, 90; பீட்ரூட், 80, கேரட், 65; பெரிய வெங்காயம், 50, உட்பட அன்றாட உணவு வகைகளுக்கு பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலை, பீர்க்கங்காய், பாகற்காய், அரை கீரை, சிறு கீரை உள்ளிட்ட அனைத்து காய்கறிகளுக்கு விலை உயர்ந்துள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'காய்கறி விலை உயர்வு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எதனால் இந்த விலை உயர்வு என்று புரியவில்லை. மாவட்ட நிர்வாகம் மலிவு விலையில், தோட்டக்கலை துறை மூலம் காய்கறி வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.