/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்துறை பிடியில் சிக்காத ஒற்றை யானை; உணவுக்காக குப்பையை கிளறும் அவலம்

ADDED : மே 23, 2025 07:08 AM
ஊட்டி : ஊட்டி புறநகரில் சுற்றித் திரியும் ஒற்றையானை உணவுக்காக குப்பைகளை கிளறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி அருகே , தொட்டபெட்டா காட்சி முனைக்கு கடந்த, 6ம் தேதி மாலை, 5:00 மணியளவில் யானை ஒன்று நுழைய முயன்றது. காட்சி முனைக்கு அதிகளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்வதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டது.
நீலகிரி வன கோட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், ரேஞ்சர்கள், வனக் காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், முதுமலையில் இருந்து யானைகளை விரட்டும் கும்கி ஊழியர்கள் என , 40 பேர் கொண்ட குழு யானையை விரட்டினர்.
யானை கடந்த மூன்று நாட்களாக கேத்தி ரயில் நிலையம், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது. உணவு ஏதும் கிடைக்காததால் குப்பை தொட்டிகளை கிளறி உணவை தேடிவருகிறது. தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். தற்போது, அங்கர் போர்டு எஸ்டேட் பகுதிக்கு சென்றாக மக்கள் கூறுகின்றனர். எனவே, மக்கள் மற்றும் யானையின் பாதுகாப்பை கருதி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.