/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயல் வெளியான காட்டேரி -முட்டிநாடு சாலை சீரமைப்பதில் பேருராட்சி மெத்தனம்
/
வயல் வெளியான காட்டேரி -முட்டிநாடு சாலை சீரமைப்பதில் பேருராட்சி மெத்தனம்
வயல் வெளியான காட்டேரி -முட்டிநாடு சாலை சீரமைப்பதில் பேருராட்சி மெத்தனம்
வயல் வெளியான காட்டேரி -முட்டிநாடு சாலை சீரமைப்பதில் பேருராட்சி மெத்தனம்
ADDED : அக் 30, 2024 08:04 PM

குன்னுார் : குன்னுார் காட்டேரி அணை -முட்டிநாடு சாலை சீரமைக்கப்படாமல் வயல்வெளியாக மாறியுள்ளதால் பள்ளி குழந்தைகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குன்னுார் தாலுகாவுக்கு உட்பட்ட காட்டேரி வில்லேஜ், செலவிப் நகர், கோலனிமட்டம் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் காட்டேரி அணை - முட்டி நாடு சாலையை முக்கிய வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர். தினமும், 30க்கும் மேற்பட்ட காய்கறி மூட்டைகளை லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
மழையின் காரணமாக, இந்த சாலையில் பல இடங்களிலும் குழிகள் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. தடுப்புச் சுவர் அமைக்கப்படாததால், தோட்டங்களில் இருந்து மண்ணரிப்பு ஏற்பட்டு சாலையில் சேறும், சகதியுமாக தேங்கி நிற்கிறது.
மழைநீர் கால்வாயும் அமைக்கப்படவில்லை. சில இடங்களில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு இடிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளாக இந்த சாலையை சீரமைக்காமல் பேரூராட்சி புறக்கணித்து வருவதால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாணவ, மாணவிகள், குழந்தைகள் பள்ளிக்கு நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
குன்னுார் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தபோது, கடந்த ஜன., மாதம் முதல், பேரூராட்சியில் மட்டும் இரண்டரை ஆண்டுகளில், 10.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'கிராமங்களின் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் சாலைக்கு ஒதுக்காமல், காட்டேஜ்கள் அதிகம் பயன்பெறும் கொல்லிமலை - ஒரநள்ளி சாலைக்கு ஒதுக்கி, 1.75 கோடி ரூபாயில் பணிகள் துவக்கப்பட்டுள்ளனர்,' என்றனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து முட்டிநாடு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

