/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்பந்து போட்டியில் நீலகிரி கல்லுாரி அணி அசத்தல்
/
கால்பந்து போட்டியில் நீலகிரி கல்லுாரி அணி அசத்தல்
ADDED : அக் 04, 2024 10:11 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே தாளூரில் நடந்தி கால்பந்து போட்டியில், நீலகிரி கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
பந்தலுார் அருகே தாளூரில் செயல்பட்டு வரும் நீலகிரி கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், பாரதியார் பல்கலைக்கழக கல்லுாரி மாணவர்களுக்கு இடையிலான 'ஏ' பிரிவு கால்பந்து போட்டி கடந்த மூன்று நாட்களாக நடந்தது.
போட்டிகளை கல்லுாரி செயலாளர் ராசித்கசாலி துவக்கி வைத்தார். அதில் நீலகிரி மற்றும் கோவை கல்லுாரிகளை சேர்ந்த, 22 அணி வீரர்கள் பங்கேற்று விளையாடின.
இதன் இறுதி போட்டியில், கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி மற்றும் நீலகிரி கலை அறிவியல் கல்லுாரி அணி மாணவர்கள் விளையாடினர். அதில், மூன்று கோல்கள் அடித்து நீலகிரி கல்லுாரி அணி முதல் இடம் பிடித்தது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு, கல்லுாரி செயலாளர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி பேராசிரியர் ராதாகிருஷ்ணன், நீலகிரி கல்லுாரி உடற்கல்வி பேராசிரியர் செரில் வர்கீஸ் ஆகியோர் பரிசு கோப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.