/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'உயிர்ச்சூழல் காப்பக எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்' : ஊட்டியில் நடந்த 'நீலகிரி ஸ்கேப்' மாநாட்டில் வலியுறுத்தல்

ADDED : ஆக 22, 2025 08:12 AM

ஊட்டி; 'இந்திய உயிர்ச்சூழல் காப்பக எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும்' என, ஊட்டியில் நடந்த 'நீலகிரி ஸ்கேப்' மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், 'நீலகிரி ஸ்கேப்' என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் சார்பில், 'நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகம்-2025' என்ற தலைப்பில் மூன்று நாள் மாநாடு, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று துவங்கியது. இதனை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, 'யுனெஸ்க்கே'வுக்கான, இந்திய இயற்கை அறிவியல் மைய தலைவர் பென்னோ போயர் பேசியதாவது:
கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரம் மூலம் அமைதியை வளர்ப்பதற்காக, 1945ல் 'யுனெஸ்கோ' நிறுவப்பட்டது. போர் என்பது மனிதர்களின் மனதில் தொடங்குவதால், அமைதிக்கான பாதுகாப்பு மனிதனின் மனதில் கட்டமைக்கப்பட வேண்டும். அப்போது, வன்முறையிலிருந்து விடுதலை, சுத்தமான காற்று மற்றும் நல்லிணக்கம் தோன்றும். நீதி மற்றும் சமத்துவத்திற்கான அடித்தளம் ஆகியவை இதில் கிடைக்கும்.
மக்கள் தொகை அதிகரிப்பு, வளங்கள் சுரண்டல், மாசுபாடு ஆகியவை, காற்று, நீர், உணவு, ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் வகையில் உள்ளன. அமைதி மற்றும் மக்களை மதிக்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் இவற்றை வலுப்படுத்த முடியும்.
உயிர்ச்சூழல் இருப்புக்கள் இந்த முயற்சியில் ஒரு முக்கிய கருவியாகும்.
இந்தியா, யுனெஸ்கோவின் நிறுவன உறுப்பினராக உள்ளது. தற்போது, 12 உயிர்ச்சூழல் காப்பகங்களை கொண்டுள்ளது. 2000ம் ஆண்டில் இந்தியாவின் முதல், உயிர்ச்சூழல் காப்பகமாக நீலகிரி அறிவிக்கப்பட்டது.
காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, மாசுபாடு ஆகியவற்றுக்கு நெருக்கடி நிலவுவதற்கு தீர்வு காணவும், மனித---விலங்கு நல்லிணக்கத்தை காக்க, இந்தியாவில் குறைந்து காணப்படும் உயிர்ச்சூழல் காப்பகங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீலகிரி மாவட்ட எஸ்.பி. , நிஷா மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.