/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பில் தொடரும் குளறுபடி! விசாரணை நடத்த மகளிர் திட்ட அலுவலர் உத்தரவு
/
பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பில் தொடரும் குளறுபடி! விசாரணை நடத்த மகளிர் திட்ட அலுவலர் உத்தரவு
பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பில் தொடரும் குளறுபடி! விசாரணை நடத்த மகளிர் திட்ட அலுவலர் உத்தரவு
பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பில் தொடரும் குளறுபடி! விசாரணை நடத்த மகளிர் திட்ட அலுவலர் உத்தரவு
ADDED : ஆக 25, 2025 09:11 PM

பந்தலுார்: 'நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் குறித்து, விசாரணை நடத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களை, ஒருங்கிணைக் கும் ஒரு சங்கமாக பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு துவக்கப்பட்டது. இதன் மூலம் சுய உதவி குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாடு, வங்கி இணைப்பு உள்ளிட்ட சேவைகள் செய்யப்படுகின்றன. அந்த அமைப்புக்கு, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் நிதி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது.
பதவி காலம் முடிந்தும் 'பவர்' இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப் பினர், அதிகாரிகளை போல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதில், நெலாக்கோட்டை ஊராட்சியில் கடந்த, 2021 ஆம் ஆண்டு அக்., மாதம் 2-ம் தேதி, கூட்டமைப்பிற்கான, தலைவர், செயலாளர், பொருளாளர், இணை செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பதவி காலம் கடந்த, 2023 அக்., மாதம் நிறைவு பெற்றது.
ஆனால், தற்போது வரை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படாமல், பழைய நிர்வாகிகள் தற்போதும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மேலும், ஒரு ஊராட்சியில் குடியிருப்பவர், வேறு ஊராட்சியில் கூட்டமைப்பு நிர்வாகிகளாக பதவி வகிக்க கூடாது என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில், சேரங்கோடு ஊராட்சி கூட்டமைப்பில், பதவியில் உள்ளவர்கள் சிலர் நெலாக்கோட்டை ஊராட்சி கூட்டமைப்பில் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
மாநில முதல்வருக்கு புகார் மனு அதில், பொறுப்பு வகிக்கும், நிர்வாகிகள் அரசு மூலம் வழங்கப்பட்ட கடன்களை முறையாக வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக, பாதிக்கப்பட்ட மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
அதில், 'மகளிர் கூட்டமைப்பு மூலம் வழங்கப்பட்ட கடன் மற்றும் அதன் பயனாளிகளான மகளிர் குழுக்களின் பெயர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தனி நபர்களின் பெயர் விவரங்களையும், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள கூட்டமைப்பு நிர்வாகிகளை அடையாளம் காண வேண்டும். சேரங்கோடு ஊராட்சியில் உள்ளவர்கள், நெலாக்கோட்டை ஊராட்சியில், பணியாற்றுவது குறித்த விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணை நடத்த உத்தரவு மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன் கூறுகையில், ''அந்தந்த ஊராட்சியில் குடியிருப்பவர்கள் மட்டுமே கூட்டமைப்பில் பதவி வகிக்க வேண்டும். அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வைத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இவற்றை மீறும் வகையில், செயல் இழந்த கூட்டமைப்பில் நடக்கும் குளறுபடி புகார்கள் குறித்து நேரடி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்டம் முழுவதும் இது போன்று குளறுபடிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்படும்,'' என்றார்.

