தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டி மலை ரயில் மீண்டும் ஓடத் துவங்கியது

ஊட்டி மலை ரயில் மீண்டும் ஓடத் துவங்கியது

ஊட்டி மலை ரயில் மீண்டும் ஓடத் துவங்கியது


ADDED : அக் 18, 2024 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்,: ஊட்டி மலை ரயில், இரண்டு நாட்களுக்கு பிறகு, நேற்று முதல் மீண்டும் ஓட துவங்கியது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு தினமும் காலை, 7:10 மணிக்கு, மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே உள்ள மலைப்பகுதிகளில், கன மழை பெய்து வந்தது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, ரயில்வே நிர்வாகம், 16, 17 ஆகிய இரண்டு தேதிகளில் ஊட்டி மலை ரயிலை ரத்து செய்திருந்தது. மழை நின்றதை அடுத்து, நேற்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரயிலை, ரயில்வே நிர்வாகம் இயக்கியது.

நேற்று காலை, 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, மலை ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில், 150க்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us