/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மீண்டும் ஊருக்குள் வந்த கொம்பன் அச்சத்தில் சந்தக்குன்னு மக்கள்
/
மீண்டும் ஊருக்குள் வந்த கொம்பன் அச்சத்தில் சந்தக்குன்னு மக்கள்
மீண்டும் ஊருக்குள் வந்த கொம்பன் அச்சத்தில் சந்தக்குன்னு மக்கள்
மீண்டும் ஊருக்குள் வந்த கொம்பன் அச்சத்தில் சந்தக்குன்னு மக்கள்
ADDED : ஜூன் 21, 2025 06:26 AM
பந்தலுார் : பந்தலுார் அருகே பிதர்காடு உள்ளிட்ட பகுதிகளில், யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த வாரம் சந்தக்குன்னு குடியிருப்பு பகுதிக்கு வந்த யானை, ஜோய் என்பவரை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், தொல்லை தரும் காட்டு யானைகளை துரத்த ஏற்கனவே முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து ஜம்பு என்ற கும்கி வரவழைக்கப்பட்டது. ஒரு கும்கியால் காட்டு யானைகளை விரட்ட முடியாத நிலையில், நேற்று கும்கி கிருஷ்ணாவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சந்தக்குன்னு கிராம சாலைகள் மற்றும் வீடுகள் முன்பாக, ஏற்கனவே ஜோய் என்பவரை தாக்கிய ஆண் யானை முகாமிட்டது. இதனை பார்த்த மக்கள் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் ரவி, வனவர் சுதீர்குமார் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானையை அங்கிருந்து விரட்டினர்.