/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை அச்சத்தில் நெலாகோட்டை மக்கள்
/
யானை அச்சத்தில் நெலாகோட்டை மக்கள்
ADDED : ஜன 31, 2024 10:15 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே நெலாகோட்டை பகுதியில் உலா வரும் யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கூடலுாரில் இருந்து கேரளா மாநிலம் வயநாடு செல்லும் நெடுஞ்சாலையில் நெலாகோட்டை பகுதி அமைந்துள்ளது. சாலை ஓரத்தில் கடைகள் மற்றும் போலீஸ் நிலையம், அரசு ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், கோவில் மற்றும் பள்ளிவாசல்அமைந்து உள்ளது.
இதனால். பஜார் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதுடன், அதிகாலை மற்றும் இரவு நேரங்களிலும் மக்களின் நடமாட்டம் காணப்படும்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இரவு, 8:00 மணிக்கு மேல், பஜாருக்கு உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்திய ஒற்றை யானை, சில மாதங்கள் இப்பகுதிக்கு வராமல் இருந்தது. கடந்த வாரம் திடீரென பகல், 11:00 மணிக்கு சாலைக்கு வந்த யானை மக்கள் மற்றும் வாகனங்களை துரத்தி அச்சமடைய செய்தது.
நேற்று முன்தினம், 8:00 மணிக்கு மீண்டும் பஜாருக்கு திடீரென விசிட் செய்து உள்ளது. சாலையில் நடந்து வந்தவர்களையும் துரத்தியதுடன், ரேஷன் கடையை இடிக்க முற்பட்டது. பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் சப்தம் எழுப்பி யானையை அங்கிருந்து துரத்தினர்.
எனவே, இந்த யானையை, கும்கி யானைகள் உதவியுடன் அடர்த்தியான வனத்திற்குள் விரட்ட வேண்டியது அவசியம்.