/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தங்கமலை பழங்குடியின மக்கள் பாதிப்பு தண்ணீர்... தண்ணீர்!வனப்பகுதியில் சென்று குடிநீர் எடுக்கும் அவலம்
/
தங்கமலை பழங்குடியின மக்கள் பாதிப்பு தண்ணீர்... தண்ணீர்!வனப்பகுதியில் சென்று குடிநீர் எடுக்கும் அவலம்
தங்கமலை பழங்குடியின மக்கள் பாதிப்பு தண்ணீர்... தண்ணீர்!வனப்பகுதியில் சென்று குடிநீர் எடுக்கும் அவலம்
தங்கமலை பழங்குடியின மக்கள் பாதிப்பு தண்ணீர்... தண்ணீர்!வனப்பகுதியில் சென்று குடிநீர் எடுக்கும் அவலம்
ADDED : மார் 28, 2024 11:23 PM

பந்தலுார்:பந்தலுார் நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் அருகே, அமைந்துள்ள தங்கமலை
பழங்குடியின கிராமத்தில், குடிக்க தண்ணீர் வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள்
சிரமப்பட்டு வருகின்றனர்.
பந்தலுார், நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து, நடந்து செல்லும் துாரத்தில் தங்கமலை பழங்குடியின கிராமம் உள்ளது. குடியிருப்புகளின் ஒரு பகுதி செக்ஷன்-17; மறுபகுதி பிரிவு- 53 உட்பட்ட நிலமாகவும் அமைந்துள்ளது.
குடிநீர் இல்லாமல் அவதி
இங்கு எட்டு குடும்பங்களை சேர்ந்த காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தொண்டு நிறுவனம் மூலம் இவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டித் தரப்பட்ட, குடியிருப்புகள்பலமிழந்து விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது.
இதனால், எப்போது குடியிருப்புகள் இடிந்து விழுமோ என்று அச்சத்துடன் வசித்து வரும் இந்த கிராமத்து மக்களுக்கு, குடிக்க தண்ணீர் வசதி இல்லாததால், தாகத்துக்கு தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமமாக உள்ளது.
நகராட்சி அலட்சியம்
இப்பகுதி மக்கள் கூலி வேலைக்கு சென்று மாலை, 6:00 மணிக்கு திரும்பி வந்து, 500 மீட்டர் துாரமுள்ள தாழ்வான பகுதியில் தரைமட்ட குழியிலிருந்து மாசு கலந்த தண்ணீரை சுமந்து, இரவில் வனவிலங்குகள் அச்சத்துடன் ஒற்றையடி நடைபாதையில் எடுத்து வந்து தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு குடிநீர் கிணறு அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வனத்துறை எந்த தடையும் விதிக்காத நிலையில், வனத்துறையை காரணம் காட்டி, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி மற்றும் நடைபாதை வசதி ஏற்படுத்தி தரவும் முன் வராதது மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
கிராம மக்கள் கூறுகையில், 'பந்தலுார் பஜாரை ஒட்டி அமைந்துள்ள எங்கள் கிராமத்தை எட்டி பார்க்காத நகராட்சி நிர்வாகம், வேறு பகுதிகளில் எவ்வாறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வர் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். எங்கள் பிரச்னை குறித்து பலமுறை நேரில் கூறியும் தீர்வு காணாதது வேதனையை ஏற்படுத்துகிறது. மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க முடியவில்லை. தேர்தல் பிரசாரத்துக்கு யாராவது வந்தால் புகார் தெரிவிக்க உள்ளோம்,' என்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த கிராமத்தை நேரடி ஆய்வு செய்து, நடை பாதை மற்றும் குடிநீர் வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். புதிய தொகுப்பு வீடுகளை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

