/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமி உடல்: விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

ADDED : ஜன 08, 2024 11:00 PM
ஊட்டி;பந்தலுாரில் சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், விமான மூலம் சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் ஏலமன்னா பகுதியை சேர்ந்த வடமாநில தொழிலாளியின், 3 வயது குழந்தை நான்சி சிறுத்தை புலி தாக்கி பலியானார்.
இந்நிலையில், குழந்தையின் உடல், ஊட்டி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கலெக்டர் அருணா, மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்தார்.
அப்போது, குழந்தையின் தாயை ஆரத்தழுவி கண்ணீர் விட்டு, ஆறுதல் கூறி வழி அனுப்பி வைத்தார். ஊட்டியில் இருந்து சிறுமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின், அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் அங்கிருந்து ராஞ்சி வரை விமான மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
ராஞ்சியிலிருந்து, அவர்களுடைய கிராமத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து, ராஞ்சி மாவட்ட நிர்வாகத்திடம், நீலகிரி கலெக்டர் அருணா தகவல் தெரிவித்தார்.
நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல, தனது சொந்த செலவில் விமான டிக்கெட்டை எடுத்து கொடுத்துள்ளார்.
இந்த உதவிக்கு, பந்தலுார் பகுதியில் உள்ள வடமாநில தோட்ட தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.