/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடுதலாக ரூ.250 கொண்டு சென்றவருக்கு வந்த பிரச்னை
/
கூடுதலாக ரூ.250 கொண்டு சென்றவருக்கு வந்த பிரச்னை
ADDED : மார் 20, 2024 01:18 AM
கோத்தகிரி':கோத்தகிரியில், 50 ஆயிரத்து 250 ரூபாய் கொண்டு சென்றவரின் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. மாவட்ட முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், கண்காணித்து வருகின்றனர். அதன்படி, அதிக பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்வதை, வாகனம் முழுவதும் பறக்கும் படையினரால் சோதனையிடப்படுகிறது.
வாகனங்களில், 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பணம் கொண்டு செல்ல அனுமதி உண்டு. இந்நிலையில், நேற்று கோத்தகிரியில் இருந்து, ஊட்டிக்கு இருசக்கர வாகனத்தில் தமிழ்செல்வன் என்பவர் சென்றுள்ளார்.
கட்டபெட்டு பகுதியில், குன்னுார்- ஊட்டி சந்திப்பில் பறக்கும் படையினர் அந்த இருச்சக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, தமிழ்ச்செல்வன் என்பவரிடம், 50 ஆயிரத்து 250 ரூபாய் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால், அவர் விரக்தி அடைந்தார்.

