/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் மழை நீர் கால்வாய் அமைத்தால் பிரச்னை தீரும்
/
சாலையில் மழை நீர் கால்வாய் அமைத்தால் பிரச்னை தீரும்
சாலையில் மழை நீர் கால்வாய் அமைத்தால் பிரச்னை தீரும்
சாலையில் மழை நீர் கால்வாய் அமைத்தால் பிரச்னை தீரும்
ADDED : மார் 21, 2025 02:55 AM

குன்னுார்,: குன்னுார் ஜெகதளா கிராமத்தில் சாலை சீரமைக்கும் போது மழை நீர் கால்வாய் அமைக்காததால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளுக்கு தீர்வு காண வேண்டும்.
குன்னுார் அருகே ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகதளா முதல் அருவங்காடு மீன்கடை வரை உள்ள சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. எனினும் இங்கு மழை நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.
இது தொடர்பாக, பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள், ஜெகதளா சாலையோரத்தில், கால்வாய் அமைப்பதுடன், சாலையையும் சீரமைக்க கோரி, செயல் அலுவலரிடம் மனு வழங்கினர்.
கிராமத்தை சேர்ந்த ரவி கூறுகையில்,''சாலையையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கக்கோரி பலமுறை வலியுறுத்தியும் பேரூராட்சி கண்டுகொள்ளவில்லை.
சாலை சற்று உயர்வாகவும், மழைநீர் கால்வாய் சற்று தாழ்வாகவும் இருப்பதால், மினி பஸ்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பள்ளத்தில் இறக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் பழுதடைவதுடன், சாலை கற்களும் சிறிது, சிறிதாக பெயர்ந்து வருகிறது. எனவே, உடனடியாக மழை நீர் கால்வாய் அமைப்பதுடன் சாலையையும் சீரமைக்க வேண்டும்,''என்றனர்.