/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாயகம் திரும்பிய மக்கள்: பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும்
/
தாயகம் திரும்பிய மக்கள்: பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும்
தாயகம் திரும்பிய மக்கள்: பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும்
தாயகம் திரும்பிய மக்கள்: பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும்
ADDED : மார் 03, 2024 11:02 PM
கூடலுார்;'மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தாயகம் திரும்பிய மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண அரசு வாரியம் அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாயகம் திரும்பியோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கந்தையா கூடலுாரில் நிருபர்களிடம் கூறுகையில்,''இந்தியா -இலங்கை உடன்படிக்கையின் படி, இந்திய குடியுரிமை கேட்பவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆக்கிரமிப்பில், உள்ள தாயகம் திரும்பியோர் இடங்களை மீட்க வேண்டும்.
அரசு தேயிலை தோட்டங்களில் உள்ள தாயகம் திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்; பல ஆண்டுகளாக விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; தாயகம் திரும்பிய மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வாரியம் அமைக்க வேண்டும்,'' என்றார்.
அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், நிர்வாகிகள் சிவகுமார், முருகன், தட்சணாமூர்த்தி, மாரிமுத்து, செல்வராஜ், சந்தானம் உடன் இருந்தனர்.

