/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராம்பு கொள்முதல் விலை கிலோ ரூ.1,200 மகிழ்ச்சியில் கூடலுார் சிறு விவசாயிகள்

ADDED : மார் 05, 2024 12:33 AM

கூடலுார்;கிராம்புக்கான கொள்முதல் விலை, 1,200 ரூபாய் வரை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில் குறுமிளகு, கிராம்பு ஏலக்காய், ஜாதிக்காய் உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்கள் விளைவிக்கப்படுகின்றது. அதில், ஏலக்காயை தவிர்த்து மற்றவைகள் ஊடுபயிராக விளைவித்து வருகின்றனர். அதில், ஊடுபயிராக குறுமிளகுக்கு அடுத்து கிராம்பு மரங்கள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
அதில், ஆண்டுக்கு ஒரு முறை மகசூல் கிடைக்கிறது. பெரும்பாலும், இயற்கை விவசாயம் மூலம் இங்கு உற்பத்தி செய்யும் கிராம்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த ஆண்டு, அதிக விலை எதிர்ப்பார்த்த நிலையில் கிலோவுக்கு, 850 ரூபாய் வரை விலை கிடைத்து.
இந்நிலையில், நடப்பாண்டு கொள்முதல் விலையாக, 1,100 முதல் 1,200 ரூபாய் வரை கிடைத்து வருவது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில் காலநிலை மற்றும் மண் வளம் கிராம்பு வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் இயற்கை முறையில் கிராம்பை விளைவித்து அறுவடை செய்து வருகின்றனர். தற்போது, கிலோவுக்கு, 1,300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், விவசாயிகளுக்கு தரத்திற்கு ஏற்ப, 1,100 முதல் 1,200 ரூபாய் வரை விலை கிடைப்பது மகிழ்ச்சி ஏற்படுகிறது,' என்றனர்.