/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்களின் ராணி மங்குஸ்தான் சீசன் துவக்கம்
/
பழங்களின் ராணி மங்குஸ்தான் சீசன் துவக்கம்
ADDED : ஜூலை 25, 2025 08:26 PM

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் மங்குஸ்தான் சீசன் துவங்கியுள்ளது.
குன்னுார் பர்லியார் மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் பண்ணைகளில் மங்குஸ்தான் பழங்கள் அதிகம் விளைகின்றன. இந்நிலையில், தற்போது மங்குஸ்தான் சீசன் துவங்கியுள்ளது.
கிலோ, 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பர்லியார் மட்டுமின்றி, ஊட்டி, குன்னுார் பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களில் உள்ள கடைகளிலும் இவை விற்பனை செய்யப்படுகின்றன. நீலகிரி, குற்றாலம் உட்பட மலை அடிவார பகுதிகளில் அதிகம் விளைகிறது.
தோட்டக்கலை துறையினர் கூறுகையில்,'பழங்களின் ராணி என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மருத்துவ குணம் நிறைந்தது. 100 கிராம் பழத்தில், 13 சதவீத நார்சத்து, அதிகமான மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளது.
அஜீரண கோளாறுக்கு நல்ல மருந்து. மலேசியா , மியான்மார், இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகம் விளைகிறது,' என்றனர்.