/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புழங்கும் போதை பொருட்களால் இளைய தலைமுறை பாதிக்கும் அபாயம்! போலீசார்; கல்வித்துறை இணைந்து தீவிர விழிப்புணர்வு
/
புழங்கும் போதை பொருட்களால் இளைய தலைமுறை பாதிக்கும் அபாயம்! போலீசார்; கல்வித்துறை இணைந்து தீவிர விழிப்புணர்வு
புழங்கும் போதை பொருட்களால் இளைய தலைமுறை பாதிக்கும் அபாயம்! போலீசார்; கல்வித்துறை இணைந்து தீவிர விழிப்புணர்வு
புழங்கும் போதை பொருட்களால் இளைய தலைமுறை பாதிக்கும் அபாயம்! போலீசார்; கல்வித்துறை இணைந்து தீவிர விழிப்புணர்வு
ADDED : ஜூன் 26, 2025 09:28 PM

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதால், சமூக விரோதிகளால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் போலீசார்; கல்வித்துறை களம் இறங்கி உள்ளன.
போதை பொருள் பிரச்னை என்பது உள்ளூர் பிரச்னையாக இல்லாமல், உலகளாவிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவை இளைய தலைமுறையை வெகுவாக பாதித்து வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த தீய பழக்கத்துக்கு அடிமையாக்கும் முயற்சிகள் சமூக விரோதிகளால் அதிகரித்து வருகின்றன.
பள்ளி கல்லுாரிக்கு அருகில், சில சமூக விரோதிகளால் போதை பொருள்கள் மாணவர்களுக்கு விற்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தும் சில மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவரின் குடும்பத்திலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
சோதனை சாவடிகளில் கண்காணிப்பு
இந்நிலையில், மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப் படுத்த, தமிழகம், கர்னாடகா, கேரள மாநில எல்லையில் உள்ள நீலகிரியின், 12 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஓராண்டில், தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள்; கஞ்சா; மெத்த பெட்டமைன் உட்பட பல போதை பொருட்களை, கக்கனல்லா, கோத்தகிரி சோதனை சாவடி வழியாக கடத்த முயன்ற, 15 பேரை கைது செய்துள்ளனர். சில வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது.
எனினும், சில காய்கறி வாகனங்கள்; ஆம்பு லென்ஸ்கள்; கர்நாடக அரசு பஸ்கள்; இரு சக்கர வாகனங்களில் போதை பொருட்களை கொண்டு வருவதை முழுமையாக தடுக்க போலீசார் திணறி வருகின்றனர்.
பெற்றோர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு
இந்நிலையில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், போலீசார்; கல்வித்துறை இணைந்து அந்தந்த போலீஸ் டிவிஷனுக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரியில், இன்ஸ்பெக்டர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி,பேரணிகள் நடத்த மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்நது, அரசு பள்ளி,அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் கல்லுாரியில் பெற்றோர்; மாணவர்களுக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு, போதையால் விளையும் தீமைகள் குறித்து விளக்கும் நிகழ்ச்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
மேலும், போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகள் குறித்து தகவல் தரவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நீலகிரி எஸ்.பி., நிஷா கூறுகையில்,'' நம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் போதை பொருட்கள் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 12 சோதனை சாவடிகளிலும், 24 மணிநேரமும் கண்காணிப்பு தொடர்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, நடப்பாண்டு போதை பொருட்கள் புழக்கம் குறைந்துள்ளது. 6 மாதங்களில், 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு, விளையாட்டு, கல்வி போன்ற நல்ல போதை மட்டுமே தேவையாகும். அதில், ஆர்வம் கொள்ள வேண்டும். போதை பொருள் தடுப்பு தினத்தில், மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் ஓவியம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன,'' என்றார்.