/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை ஒன்று, பூஜை இரண்டு காளிபாளையத்தில்தான் இந்த கூத்து
/
சாலை ஒன்று, பூஜை இரண்டு காளிபாளையத்தில்தான் இந்த கூத்து
சாலை ஒன்று, பூஜை இரண்டு காளிபாளையத்தில்தான் இந்த கூத்து
சாலை ஒன்று, பூஜை இரண்டு காளிபாளையத்தில்தான் இந்த கூத்து
ADDED : மார் 14, 2024 11:09 PM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சியில் தார் சாலை அமைக்க, அ.தி.மு.க., தி.மு.க., தனித்தனியாக பூமி பூஜை செய்தும், இதுவரை பணிகள் எதுவும் நடக்கவில்லை.
பெரியநாயக்கன்பாளையம் அருகே எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளமடை ஊராட்சியில் சாமநாயக்கன்பாளையம் முதல் ஒன்னிபாளையம் சந்திப்பு வரை, 78.45 லட்ச ரூபாய் செலவில், 2.15 கி.மீ., தூரம் தார் சாலை அமைக்க முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் அ.தி.மு.க., சார்பில் பூமி பூஜை நடந்தது. ஆனால், கடந்த எட்டு மாதங்களாக பணிகள் எதுவும் நடக்கவில்லை. சாமநாயக்கன்பாளையம் முதல் ஒன்னிபாளையம் சந்திப்பு வரை பழுதடைந்த நிலையிலேயே சாலை கிடந்தது.
பிப்., மாதம் இதே சாலை அமைக்க, இதே திட்டத்தில் தி.மு.க., சார்பில் பூமி பூஜை நடந்தது. இதையடுத்து உடனடியாக சாலை அமைக்கப்படும் என்ற ரீதியில் குண்டும், குழியுமாக இருந்த சாலையை தோண்டி போட்டனர். இதனால் தற்போது இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இச்சாலையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து, காளிபாளையம் சமூக ஆர்வலர் அன்புச்செல்வன் கூறுகையில், இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய குடியிருப்புகள் ஏராளமாக உருவாகி வருகின்றன. இச்சாலையில், 40 தொழிற்சாலைகள் கொண்ட தொழிலகப் பகுதியும், கல்லூரியும் உள்ளது.
இங்கு தார் சாலை அமைக்கப்பட்டால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கோவை மற்றும் மேட்டுப்பாளையம் நகரங்களுக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் மிகுந்த பயனடைவர். போட்டி போட்டு பூஜை நடத்தியும், சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரச்னைக்கு அரசு விரைவில் உரிய தேர்வு காண வேண்டும் என்றார்.

