/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் அத்தி பழ சீசன் விளைச்சல் அமோகம்
/
குன்னுாரில் அத்தி பழ சீசன் விளைச்சல் அமோகம்
ADDED : மார் 05, 2024 12:41 AM

குன்னுார்;குன்னுாரில் அத்திப்பழங்கள் அதிகளவில் விளைந்துள்ளன.
குன்னுார்- - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் காட்டு அத்தி மரங்கள் உள்ளன. தற்போது பெரும்பாலான மரங்களில் காய்கள் காய்த்துள்ளது. சில மரங்களில் பழங்கள் அதிகளவில் விளைந்துள்ளன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த மரம் பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. பறவையினங்கள், வனவிலங்குகள் உட்கொள்வது அதன் ஊட்டச்சத்து அதிகரிக்க காரணமாக இருப்பதாக கால்நடை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்திப்பழத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளதாலும், உடல் வளர்ச்சி எலும்பு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பயன்கள் காரணமாகவும் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'மரங்களின் தாய் மரம் என அழைக்கப்படும் அத்திமரங்கள், மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவில் காணப்படுகிறது. ஆண்டிற்கு இரு முறை காய்க்கும் இந்த மரங்களில் சீமை, நாட்டு, வெள்ளை என பல்வேறு வகைகள் உள்ளன. ஒரு மரத்தில், 150 கிலோ வரை பழங்கள் விளையும்,'' என்றனர்.

