/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பவானி ஆற்றில் குவித்து வைத்துள்ள கற்களை அகற்ற வேண்டும்
/
பவானி ஆற்றில் குவித்து வைத்துள்ள கற்களை அகற்ற வேண்டும்
பவானி ஆற்றில் குவித்து வைத்துள்ள கற்களை அகற்ற வேண்டும்
பவானி ஆற்றில் குவித்து வைத்துள்ள கற்களை அகற்ற வேண்டும்
ADDED : மார் 12, 2024 12:10 AM
மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், தண்ணீரை தேக்கி வைக்க, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், ஆற்றில் குவித்து வைத்துள்ள கற்களை, அகற்ற வேண்டும் என, நகர மன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகர் மன்ற அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் அமுதா, துணைத்தலைவர் அருள் வடிவு மற்றும் பொறியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் பேசியதாவது:
சுனில் குமார், (அ.தி.மு.க.,) பவானி ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளது. தண்ணீரை தேக்கி வைக்க, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், ஆற்றில் பெரிய பெரிய கற்களை, குவித்து வைத்துள்ளது.
இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு தண்ணீர் எடுக்கும் இடத்திற்கு, போதிய தண்ணீர் வரவில்லை. எனவே ஆற்றில் குவித்து வைத்துள்ள, கற்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய் காண்டீபன், (தி.மு.க.,) மன்றக் கூட்டத்தில் வைக்கப்படும் அனைத்து தீர்மானங்களும், முன் அனுமதி பெற்ற பின், அஜண்டாவில் வைக்க வேண்டும். அவசரநிலை கருதி, தீர்மானம் வைப்பதை, முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு பேசியதை அடுத்து தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
தனசேகர், (அ.தி.மு.க.,)
நகரில், 80 லட்சம் ரூபாய்க்கு சாலைகள் சீரமைத்தல் உட்பட வளர்ச்சிப் பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனது வார்டில் மாகாளியம்மன் கோவிலில் இருந்து, மகாஜன பள்ளி வரை உள்ள சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் ஓட்ட முடியாத நிலையில் உள்ளது. நகராட்சி கமிஷனர் வாகனம், பள்ளி மாணவர் மீது மோதி, விபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த சாலைக்கு உடனடியாக தார் போட வேண்டும்.
நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன், மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், சுற்றுலா தலமான ஊட்டி செல்லும் பயணிகள், மேட்டுப்பாளையம் நகரை கடந்து செல்கின்றனர்.
இதனால் நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க பாரதி நகர் - சாந்தி நகர் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்க, சாத்திய கூறுகளை ஆராய்ந்து, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க, தொழில்நுட்ப ஆலோசனைக்குழு நியமிக்கவும், உரிய மேல் நடவடிக்கை தொடரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தீர்மானத்தில் கூறியுள்ளார். இந்த தீர்மானம் உள்பட, 38 தீர்மானங்கள் கூட்டத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன.

