/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாட்டில் வேலை நிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய மாநில எல்லை பகுதி
/
வயநாட்டில் வேலை நிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய மாநில எல்லை பகுதி
வயநாட்டில் வேலை நிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய மாநில எல்லை பகுதி
வயநாட்டில் வேலை நிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய மாநில எல்லை பகுதி
ADDED : பிப் 14, 2024 01:07 AM

பந்தலுார்;கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தொடரும் வனவிலங்கு தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதற்கு ஆதரவு தெரிவித்து தனியார் வாகனங்கள் ஏதும் இயக்கப்படவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததுடன், தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் நேற்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து, 'மனசாட்சி பந்த்' என்ற பெயரில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர்.
இதனால், தமிழக- கேரளா எல்லை பகுதிகளான, தாளூர், நம்பியார்குன்னு, பகுதிகளில், இரு மாநிலத்திலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'இந்த வேலை நிறுத்த போராட்டத்தால், வனவிலங்கு தொல்லைக்கு தீர்வுகிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,' என்றனர்.