ADDED : செப் 14, 2026 03:32 AM
அ நிறம் | அளவு
ஊட்டி: கலெக்டர் லட்சுமி பவ்யா, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்த தேர்வில், காலை, 9:00 மணிக்கு, கொள்குறிவகை தேர்வில், 498, மற்றும் பகல், 2:00 மணிக்கு நடைபெறும் முறை தேர்வில், 3 பேர் பங்கேற்கின்றனர்.
இந்தத் தேர்வை, கண்காணிக்க ஏதுவாக, டி.என்.பி.எஸ்.சி., யால் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதவரும் தேர்வர்கள் காலை, 9:00 மணிக்குள்ளும், பிற்பகல் 2:00 மணிக்குள்ளும் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும், தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
