/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளாவில் பிடிபட்டு கர்நாடகாவில் உயிரிழந்த பரிதாபம் :உரிய விசாரணைக்கு உத்தரவு
/
கேரளாவில் பிடிபட்டு கர்நாடகாவில் உயிரிழந்த பரிதாபம் :உரிய விசாரணைக்கு உத்தரவு
கேரளாவில் பிடிபட்டு கர்நாடகாவில் உயிரிழந்த பரிதாபம் :உரிய விசாரணைக்கு உத்தரவு
கேரளாவில் பிடிபட்டு கர்நாடகாவில் உயிரிழந்த பரிதாபம் :உரிய விசாரணைக்கு உத்தரவு
ADDED : பிப் 04, 2024 11:07 PM
பந்தலுார்:கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ரேடியோ காலருடன் பிடிக்கப்பட்ட ஆண் யானை, கர்நாடகா மாநிலத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் முகாமிட்டு, சஹாரா தோட்டத்தில், தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்த யானையை, கடந்த ஜன.,16 ல், கர்நாடகா வனத்துறையினர் பிடித்தனர்.
இந்த யானை மனிதர்களை இதுவரை எந்த தொல்லையும் செய்தது இல்லை. ஆனால் குடிநீர் குழாய்களை உடைத்து, தண்ணீர் பருகி வந்ததால், யானைக்கு தண்ணீர் என்று பெயரிடப்பட்டு, ரேடியோ காலருடன் மூலஹள்ளி வனத்தில் விடுவிக்கப்பட்டது.
இந்த யானை, கபினி நதிக்கரை வழியாக வனப் பகுதிகளை கடந்து, நேற்று முன்தினம் கேரளா மாநிலம் மானந்தவாடி பஜார் பகுதியில் உலா வந்தது.
முக்கிய அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் வழியாக வந்த யானையை, வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கையை தவிர்த்து, கேரளா வனத்துறையினர் இரண்டு டோஸ் மயக்க ஊசி செலுத்தினர். பின், மூன்று கும்கி யானைகள் உதவியுடன், லாரியில் ஏற்றி இரவு, 10:00 மணிக்கு, கர்நாடகா மாநில முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஜெயபிரகாஷ் அறிவுரையின் பேரில், கர்நாடகா மாநிலம் ராமாபுரம் யானைகள் முகாமிற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, பின், பந்திப்பூர் வனப்பகுதியில் நள்ளிரவில் இறக்கி விடப்பட்டது.
நேற்று முன்தினம் காலை இந்த பகுதியில் கர்நாடகா வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, யானை பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. இரு மாநில வனத்துறை உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.
வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'யானையின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யாமல் பல மணி நேரம் லாரியில் கொண்டு சென்றதால் யானை உயிரிழந்திருக்கலாம் என்பதால், இரு மாநில வனத்துறையினரும் உரிய விசாரணை நடத்த வேண்டும்.' என்றனர்.

