/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நாள்தோறும் அச்சத்தில் வாழும் பழங்குடியின மக்கள் இப்போ விழுமோ,எப்போ விழுமோ...!ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் இங்கே மாறவில்லை
/
நாள்தோறும் அச்சத்தில் வாழும் பழங்குடியின மக்கள் இப்போ விழுமோ,எப்போ விழுமோ...!ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் இங்கே மாறவில்லை
நாள்தோறும் அச்சத்தில் வாழும் பழங்குடியின மக்கள் இப்போ விழுமோ,எப்போ விழுமோ...!ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் இங்கே மாறவில்லை
நாள்தோறும் அச்சத்தில் வாழும் பழங்குடியின மக்கள் இப்போ விழுமோ,எப்போ விழுமோ...!ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் இங்கே மாறவில்லை
ADDED : மார் 05, 2024 12:40 AM

பந்தலுார்;பந்தலுார் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஓர்கடவு கிராமத்தில் மூன்று ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத தொகுப்பு வீடுகளால், பழங்குடியின மக்கள் குடிசைகளில் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
பந்தலுார் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, 12வது வார்டு பகுதியில் ஓர்கடவு பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இங்கு பணியர் சமுதாயத்தை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதில், 5- வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சி மூலம் தொகுப்பு வீடு கட்டும் பணி துவக்கப்பட்டது.
ஆமை வேகத்தில் நடந்த பணி இதுவரை நிறைவு பெறாத நிலையில், குடியிருந்த வீட்டையும் இடித்துவிட்டு, தற்போது குடியிருக்க வீடு இல்லாமல், சிறிய குடிசை வீடுகள் அமைத்து அதில் பழங்குடியின மக்கள் வாழும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
'வீடு கட்டும் பணியை விரைவில் நிறைவு செய்து தங்களுக்கு வழங்க வேண்டும்,' என, பழங்குடியின மக்கள், தொடர்ந்து அதிகாரிகளிடம் குரல் கொடுத்தும், இதுவரை அரசு அதிகாரிகள்; அரசியல்வாதிகள் இவர்களை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், அங்கு வசிக்கும் அம்மணி, குஞ்சன், காளன், தேவி, நுாஞ்சன் ஆகியோரின் வீடுகள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் பாழடைந்து காணப்படுகிறது. வீட்டின் மேல் கூரை சுவர்கள் அவ்வப்போது இடிந்து விழுவதுடன், அடித்தளமும் பெயர்ந்து சுற்று சுவரும் விரிசல் அடைந்து உள்ளது.
மழைகாலத்தில் அவதி
மழை காலங்களில் வீடுகளுக்குள் குடியிருக்க முடியாத நிலையில், மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லாத நிலையில் தங்களின் நிலை குறித்து யாரிடம் போய் கூறுவது என்பதை அறியாமல் மலை பகுதியின் மண்ணின் மைந்தர்கள் புலம்பி வருகின்றனர்.
கிராமவாசி காளன் கூறுகையில்,''இப்பகுதிக்கு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள்; சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் வந்து, இங்கு கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீட்டு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இடிந்து விடும் நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தருவதுடன், குடிநீர், தெருவிளக்கு, நடைபாதை போன்ற அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தர வேண்டும்,'' என்றார்.
பண்டைய பழங்குடிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,'பழங்குடியின மக்கள் வாழ்வு மேம்பட, மத்திய; மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி எவ்வாறு எங்கள் மக்களுக்கு செல்கிறது என்பதற்கு இந்த கிராம ஒரு உதாரணம் மட்டும் தான். இத்தகைய கிராமங்கள், மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, மிகவும் அவதிப்படும் மக்களுக்கு உதவ வேண்டும்.
பழங்குடியினர் நிதியை முறையாக செலவு செய்ய வேண்டும்,' என்றனர்.

