/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில் சுவரை சேதப்படுத்திய யானை மேலுார் கிராம மக்கள் பீதி
/
கோவில் சுவரை சேதப்படுத்திய யானை மேலுார் கிராம மக்கள் பீதி
கோவில் சுவரை சேதப்படுத்திய யானை மேலுார் கிராம மக்கள் பீதி
கோவில் சுவரை சேதப்படுத்திய யானை மேலுார் கிராம மக்கள் பீதி
ADDED : பிப் 09, 2024 11:15 PM

ஊட்டி:ஊட்டி அருகே, கிராம கோவில் தடுப்புச்சுவரை யானை இடித்து சேதப்படுத்தியுள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஊட்டி மேலுார் அரையட்டி கிராமத்தில், 120 குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் கடந்த, 15 நாட்களாக காட்டு யானை முகாமிட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட, கிராம மக்கள் அச்சத்திற்கு இடையே வெளியே சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் சுற்றிய யானை, கோவில் சுவரை இடித்து சேதப்படுத்தியுள்ளது. அமாவாசை நாளான நேற்று, கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள், யானையை கண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். சிறிது நேரத்தில் யானை வனப்பகுதிக்குள் சென்றதை அடுத்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.
அரையட்டி கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் கூறுகையில், ''கிராமத்திற்குள் இதுவரை யானை வந்ததில்லை. கடந்த சில நாட்களாக இதே பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. நேற்று காலை கோவில் சுவரை இடித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மக்களை அச்சுறுத்தி வரும் யானையை, வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.