/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உள்ளாட்சி அமைப்பின் பணிகள் மக்களுக்கு பயன்பட வேண்டும்
/
உள்ளாட்சி அமைப்பின் பணிகள் மக்களுக்கு பயன்பட வேண்டும்
உள்ளாட்சி அமைப்பின் பணிகள் மக்களுக்கு பயன்பட வேண்டும்
உள்ளாட்சி அமைப்பின் பணிகள் மக்களுக்கு பயன்பட வேண்டும்
ADDED : நவ 18, 2024 09:28 PM
கூடலுார்; 'நீலகிரியில், உள்ளாட்சி அமைப்பின் பணிகளை மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்ற வேண்டும்,' என, மா.கம்யூ., மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கூடலுார் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் மா.கம்யூ., இரண்டு நாள் மாவட்ட மாநாடு, 16ம் தேதி, துவங்கியது. சுரேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர்கள் பத்ரி, காமராஜர், நாகராஜ் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
நீலகிரி பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை இன்றி, தேயிலை விவசாயத்தை விவசாயிகள் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சூழலுக்கு ஏற்ற தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தியும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
சேதமடைந்த சாலைகளை தரமாக சீரமைக்க வேண்டும். நிலப்பிரசனைக்கு தீர்வு காண்பதுடன், அனைவருக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். வனவிலங்கு, மனிதர்களை தாக்குவதை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பின் பணிகளை மக்களுக்காக பயன்படும் வகையில் மாற்ற வேண்டும். தனியார் ஆதாரத்தை தவிர்க்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டின் ஒரு பகுதியாக, தேவர்சோலை சாலையில், விவசாய சங்க மாவட்ட தலைவர் வாசு தலைமையில் பொதுகூட்டம் நடந்தது. அதில், அகில இந்திய தொழிலாளர் சங்க துணை செயலாளர் சிவதாசன் பேசினார். விழா குழு பொருளாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

