/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊ ட்டி படகு இல்ல ஏரியில் நடக்கும் துார் வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவு...! இரண்டாம் சீசனில் பயணிகள் விசாலமாக சவாரி செய்யலாம்
/
ஊ ட்டி படகு இல்ல ஏரியில் நடக்கும் துார் வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவு...! இரண்டாம் சீசனில் பயணிகள் விசாலமாக சவாரி செய்யலாம்
ஊ ட்டி படகு இல்ல ஏரியில் நடக்கும் துார் வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவு...! இரண்டாம் சீசனில் பயணிகள் விசாலமாக சவாரி செய்யலாம்
ஊ ட்டி படகு இல்ல ஏரியில் நடக்கும் துார் வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவு...! இரண்டாம் சீசனில் பயணிகள் விசாலமாக சவாரி செய்யலாம்
ADDED : ஆக 17, 2025 09:33 PM

ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலமாக, மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஏரி, 1823ல் ஆங்கிலேயர் காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில், சேரிங்கிராஸ் முதல் காந்தள் வரை ஏரியின் பரப்பளவு இருந்தது. அப்போது ஏரியின் தண்ணீர் குடிநீர், விவசாயத்துக்காக பயன்படுத்தப்பட்டது.
காலப்போக்கில், ஊட்டி நகரில் கட்டடங்கள் அதிகரித்து, அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக, ஊட்டி ஏரியில் கலந்து வருகிறது.
மேலும், தொட்டபெட்டா முதல், நகரில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து, மழையின் போது அடித்து வந்த மண்ணும் ஏரியில் அதகளவில் சேர்கிறது.
இதற்கிடையே கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு, முதன் முறை மலை பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ஏரி துார்வாரப்பட்டது. அப்போது, முழு அளவில் மண் எடுக்க முடியாமல், ஆகாயதாமரை வளர்ந்து காணப்பட்டது.
தொடர்ந்து, கடந்த, 2018ம் ஆண்டு ஏரியை துார்வாரும் பணி நடந்தது. அப்போது, கோடப்பமந்து கால்வாயில் இருந்து, ஊட்டி ஏரியில் மண் கலக்கும் முகத்துவாரத்தில், 2 அடி ஆழத்திற்கு படிந்திருந்த சேறு மட்டுமே அகற்றப்பட்டது.
அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் இந்நிலையில், இங்கு ஆண்டுதோறும் வரும், 15 லட்சம் சுற்றுலா பயணிகள் விசாலமாக படகு சவாரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. கோடை சீனின்போது, படகு சவாரி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.
மேலும், சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படும், 33 மோட்டார் படகுகள், 17 துடுப்பு படகுகள், 105 மிதி படகுகள். ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தில் உள்ள படகுகளை முழுமையாக பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
இதைதவிர, ஏரியில் அதிகளவில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. 'இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஊட்டி படகு இல்ல ஏரியை துார்வார வேண்டும்,' என, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை தொடர்ந்து, ஊட்டி படகு இல்ல ஏரியை முழுவதுமாக துாரவார பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு ஆய்வு மேற்கொண்டு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கடந்த, 8 மாதங்களாக துார்வாரும் பணிகள் நடந்து, 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
பயணிகள் விசாலமாக சவாரி செய்யலாம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டி படகு இல்ல ஏரி, கோடப்பமந்து கால்வாய் முழுவதுமாக துார்வாரும் பணிகள் நடந்து வருகிறது. கோடப்பமந்து கால்வாயில், 3.5 கி.மீ., துாரம் மணல் மற்றும் செடிகள் அகற்றப்படுகிறது. இதேபோல், 10 லட்சம் மீட்டர் கியூபிக் கொள்ளளவு கொண்ட ஊட்டி ஏரியில், 2.98 லட்சம் மீட்டர் கியூபிக் அளவுக்கு சகதி எடுக்கப்பட்டு வருகிறது.
கோடப்பமந்து கால்வாயில் இருந்து ஏரியில் இணையும் இடத்தில் சேறும், பிற கழிவுகளும் தானியங்கி முறையில் அகற்றப்படும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியாக, 10 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முழுமை பெற்ற பின் ஏரியில் அனைத்து பகுதிகளிலும், இரண்டாம் சீசனின் போது, விசாலமாக படகு சவாரி செய்யமுடியும்,'என்றனர்.