/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கீழ் கைக்காட்டியில் ரூ. 1.70 கோடியில் 'ரவுண்டான' பணி; கோரிக்கை நிறைவேறியதால் வாகன ஓட்டுனர்கள் நிம்மதி

ADDED : டிச 27, 2024 10:23 PM

ஊட்டி; ஊட்டி- மஞ்சூர் சாலையில், 1.70 கோடி ரூபாயில் 'ரவுண்டான' அமைத்து, சாலை செப்பனிடும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடந்து வருகிறது.
ஊட்டி- மஞ்சூர் சாலையில் உள்ள கீழ் கைக்காட்டி பகுதி, குன்னுார், மஞ்சூர், ஊட்டி பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் இச்சாலையில் செல்கின்றன. குறுகலாக உள்ள இச்சாலையில் வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டு வருவதுடன்,  விபத்து அபாயமும் உள்ளது.
குறிப்பிட்ட பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் இடம் விட்டு செல்வதில் வாகன ஓட்டிகள் திணறுவதுடன் காலதாமதமாகிறது.  இதனால், 'கீழ் கைக்காட்டி சாலையை அகலப்படுத்தி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்,' என,  வாகன ஓட்டிகள் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின், திட்ட அறிக்கை தயாரித்து மாவட்ட நிர்வாகம் மூலம் மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், கீழ் கைக்காட்டியிலிருந்து ஊட்டிக்கு செல்லும் சாலையில், தனியார் எஸ்டேட்டுக்கு எதிரே உள்ள, மலை காய்கறி பயிரிட்ட ஆக்கிரமிப்பு பகுதி அகற்றப்பட்டது.
இருபுறம் வாகனங்கள் சென்று வரும் வகையில் சாலை அகலப்படுத்தப்பட்டு தடுப்பு சுவர் அமைக்கும் பணி, 1.70 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.
உதவி செயற்பொறியாளர் சாதிக் பாட்ஷா  கூறுகையில்,''குறுகலாக உள்ள அந்த பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைத்து, சாலை அகலப்படுத்தப்படுகிறது. இருபுறம் வாகனங்கள் செல்லும்வகையில், 'ரவுண்டான' அமைக்கப்படுகிறது.
அதே சாலையில் குந்தா பாலம் முதல் மஞ்சூர் பஜார் வரை மூன்று கி.மீ., துாரம், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை செப்பனிடும் பணிகள் நடக்கிறது,'' என்றார்.