/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உள்ளிருப்பு போராட்டத்திற்கு முயன்ற தொழிலாளர்கள்; போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்

ADDED : ஜன 24, 2024 11:48 PM

ஊட்டி : ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த தொழிலாளர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மஞ்சூர் அருகே தாய் சோலை, நாடுகாணி, தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, 5 ஆண்டுகள் கடந்த தொழிலாளர்களுக்கு பணபலன்கள், பென்ஷன் கிடைக்கவில்லை. கடந்த, 2018ம் ஆண்டிலிருந்து வருங்கால வைப்புநிதி முறையாக செலுத்தவில்லை. கடந்த அக்., மாதம் முதல் ஜன., வரை சம்பளம் வழங்கவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருக்கு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், கிராம நிர்வாக வருவாய் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'வரும் திங்கட்கிழமை குறைதீர்ப்பு கூட்டத்தில் உரிய தீர்வு காணப்படும்,' என, தெரிவித்ததை அடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.