தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'எல்நினோ' பாதிப்பு! விளையாட்டு மைதானம் போல் மாறிய நீர்பிடிப்பு பகுதி: 150 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

'எல்நினோ' பாதிப்பு! விளையாட்டு மைதானம் போல் மாறிய நீர்பிடிப்பு பகுதி: 150 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

'எல்நினோ' பாதிப்பு! விளையாட்டு மைதானம் போல் மாறிய நீர்பிடிப்பு பகுதி: 150 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


UPDATED : ஆக 13, 2026 03:57 AM

ADDED : ஆக 12, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2026 03:57 AM ADDED : ஆக 12, 2026 05:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து இல்லாத காரணத்தால், அணைகளின் நீர்மட்டம் குறைந்து, குடிநீர் வினியோகம், மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குந்தா பைக்காரா நீர்மின் திட்டத்தின் கீழ் , 12 மின் நிலையங்கள் , 13 அணைகள் உள்ளன. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வாயிலாக , 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.

பொதுவாக, ஜன., மாதம் முதல் மே மாதம் வரை பெய்யும் கோடை மழையின் சராசரி மழை அளவு, 30 செ.மீ., ஆகும். இதுவரை, 8 செ.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது. ஜூன் மாதம் முதல் செப்., மாதம் வரை தென் மேற்கு பருவ மழை காலமாகும். சராசரி மழை அளவு, 60 செ.மீ., ஆகும். இதுவரை, 15 செ.மீ. , மழை பெய்துள்ளது. நடப்பாண்டு இரண்டு கால பருவ மழை பொய்த்ததால், கடும் வறட்சி ஏற்பட்டு அணைகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது.

அணைகளில் 30 சதவீதம் மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உட்பட பெரும்பாலான அணைகளில் , 30 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது.

இங்குள்ள 12 மின் நிலையத்தில் , 32 பிரிவுகள் உள்ளன. தண்ணீர் அளவை பொறுத்து தினசரி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நிலையில், 15 பிரிவுகளில் மட்டும், 150 முதல், 200 மெகாவாட் வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிற பிரிவுகளில் தண்ணீர் இல்லாததால் அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக, கோவை உட்பட பிற மாவட்டங்களுக்கு எதிர்பார்த்த அளவு மின்சாரம் வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் வினியோகத்தில் சிக்கல் மேலும், எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும், 150 கிராமங்களுக்கு அடுத்த மாதம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், மழை வேண்டிய பல கிராமங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'பருவ மழை பொய்த்ததால் பெரும்பாலான அணைகளில் தண்ணீர் அளவு படிப்படியாக குறைந்து , 30 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது. எதிர்பார்த்த அளவு மின் உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us