/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரேடியோ வானியல் மையத்தில் திருட்டு; ஐந்து பேர் கைது
/
ரேடியோ வானியல் மையத்தில் திருட்டு; ஐந்து பேர் கைது
ரேடியோ வானியல் மையத்தில் திருட்டு; ஐந்து பேர் கைது
ரேடியோ வானியல் மையத்தில் திருட்டு; ஐந்து பேர் கைது
ADDED : ஆக 24, 2025 11:10 PM
ஊட்டி; ஊட்டியில் உள்ள, ரேடியோ வானியல் மையத்தில் திருட்டில் ஈடுபட்ட வழக்கில் மேலும், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி முத்தோரை பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான வானொலி வானியற்பியல் தேசிய மையம் கட்டுப்பாட்டின் கீழ், ரேடியோ வானியல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வானியல் மையம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையமாகும். கடந்த வாரத்தில் இந்த மையத்தின் பல இடங்களில் பயன்படுத்தாத அறைகளில் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அந்த அறைகளில் சோதனை செய்த போது, 32 பேட்டரிகள், சோலார் ஹீட்டர், காப்பர் ஒயர் உட்பட பல லட்சம் ரூபாய் பொருட்கள் திருடு போயிருந்தது. அதே இடத்தில் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
தொடர்ந்து,வானியல் மைய விஞ்ஞானி கிருஷ்ணகுமார், ஊட்டி ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். ஊட்டி ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கோவை மாவட்டத்தில் இருந்து கூலி வேலை உட்பட பல்வேறு காரணங்களுக்காக இங்கு வந்து,தொடர் திருட்டில் ஒரு குழு ஈடுபட்டது தெரியவந்தது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த எட்டு பேர் கடந்த ஏப்.மாதம் கைது செய்யப்பட்டனர். தற்போது, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ்,25, மனோஜ்,21, தர்மா,40, குமார்,35, கவிராஜ்,30 ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.