/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்புவேலி கம்பிகள் திருட்டு; ஊட்டியில் அதிகாரிகள் விசாரணை
/
தடுப்புவேலி கம்பிகள் திருட்டு; ஊட்டியில் அதிகாரிகள் விசாரணை
தடுப்புவேலி கம்பிகள் திருட்டு; ஊட்டியில் அதிகாரிகள் விசாரணை
தடுப்புவேலி கம்பிகள் திருட்டு; ஊட்டியில் அதிகாரிகள் விசாரணை
ADDED : ஏப் 04, 2025 10:34 PM

ஊட்டி; ஊட்டி படகு இல்லம் நடைபாதை தடுப்பு கம்பிகள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, படகு இல்லம் வரை, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மக்கள் சாலையோரத்தில், சிரமம் இல்லாமல் நடந்து செல்லும் பொருட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபாதையில் கடந்த ஆண்டு சீசன் நேரத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'இன்டர்லாக்' கற்கள் பதித்து, இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்து.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில், இரும்பு கம்பிகள் ஒன்றன் பின் ஒன்றாக உடைத்து திருடப்பட்டு வருகிறது.
இவ்வாறு, திருட்டில் ஈடுபடுபவர்கள் கம்பிகளை விற்று, சிலர் மது அருந்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.