/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் பண்டிகைக்கு போதிய பஸ்கள் இல்லை; உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிப்பு
/
பொங்கல் பண்டிகைக்கு போதிய பஸ்கள் இல்லை; உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிப்பு
பொங்கல் பண்டிகைக்கு போதிய பஸ்கள் இல்லை; உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிப்பு
பொங்கல் பண்டிகைக்கு போதிய பஸ்கள் இல்லை; உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிப்பு
ADDED : ஜன 15, 2024 10:42 PM
கோத்தகிரி;கோத்தகிரி- ஊட்டி இடையே, பொங்கல் பண்டிகை நாட்களில், போதிய பஸ்கள் இயக்காததால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி மற்றும் ஊட்டி அரசு போக்குவரத்து கழக கிளைகளில் இருந்து கடந்த காலங்களில், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக, பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், ஒரு மணி நேரத்திற்கு, ஒருமுறை பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை நேரத்தில், கோத்தகிரி மற்றும் ஊட்டி போக்குவரத்து கிளைகளில் இருந்து இயக்கப்பட்டுவந்த, நான்கு பஸ்களில், இரண்டு பஸ்கள் மைசூரு உட்பட, வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டுள்ளன.
இதனால், கோத்தகிரி- ஊட்டி இடையே, 20 'சிங்கிள்' பஸ்களின் இயக்கம் தடைப்பட்டுள்ளது. இதனால், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே, பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த, 13ல் இரவு ஊட்டி ஏ.டி.சி., பஸ் நிறுத்தத்தில் பயணிகள் மாலை, 6:00 மணிமுதல், இரவு, 8:00 மணிவரை காத்திருந்தனர். ஆத்திரம் அடைந்த பயணிகள், மத்திய பஸ் நிலையம் 'டெப்போ' வுக்குள் பஸ்கள் செல்லாதவாறு முற்றுகையிட்டனர்.
அதின் பின், மூன்று மணி நேரம் காலம் கடந்து, தாமதமாக வந்த பஸ்சில் நின்றப்படியே பயணித்து, கோத்தகிரியை அடைந்தனர். பின்பு அங்கிருந்து தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி நள்ளிரவில் வீடுகளுக்கு சென்றனர்.
இதே நிலை, நேற்று முன்தினம் காலையிலும் தொடர்ந்தது. கோத்தகிரியில் இருந்து, காலம் கடந்து, ஊட்டிக்கு சென்ற பஸ்சில், இருக்கைகள் இல்லாமல், பயணிகள் நின்று கொண்டு பயணித்தனர்.
மக்கள் கூறுகையில், 'எதிர்வரும் முக்கியமான பண்டிகை நாட்களில், உள்ளூர் மக்களுக்கு தேவைகேற்ப பஸ் சேவையை பூர்த்தி செய்த பின், வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.