/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் அருகே பத்து நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை -குடங்களுடன் மக்கள் முற்றுகை.
/
பந்தலுார் அருகே பத்து நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை -குடங்களுடன் மக்கள் முற்றுகை.
பந்தலுார் அருகே பத்து நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை -குடங்களுடன் மக்கள் முற்றுகை.
பந்தலுார் அருகே பத்து நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை -குடங்களுடன் மக்கள் முற்றுகை.
ADDED : ஜன 07, 2025 01:56 AM

பந்தலுார்; பந்தலுார் அருகே கொளப்பள்ளி ரூபி மைன்ஸ் பகுதியில் கடந்த, 10 நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால், மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.
பந்தலுார் சேரங்கோடு ஊராட்சியின், 6-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கொளப்பள்ளி 'ரூபிமைன்ஸ்' கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 60 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே ஊராட்சி மூலம் குடிநீர், சீராக வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் புதிதாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டது.
திட்டம் துவங்கி ஆறு மாதம் நிறைவடையும் நிலையில், முதல் இரண்டு நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, குடிநீர் வினியோகம் வாரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த, 10 நாட்களாக தொடர்ச்சியாக குடிநீர் வினியோகம் செய்யாமல் நிறுத்தப்பட்டது.  இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்துடன் தகவல் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இதனால், நொந்து போன கிராம மக்கள் நேற்று காலி குடங்களுடன், கொளப்பள்ளி பஜார் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதிகாரிகளை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள் கூறுகையில், 'குடிநீர் உதவியாளர் தனது விருப்பத்திற்கு ஏற்ப, குடிநீர் வினியோகம் செய்கிறார். பொதுமக்கள் இவரிடம் தண்ணீர் வராதது குறித்து கேட்டால் உரிய பதில் தருவதில்லை,' என்றனர். தொடர்ந்து, ஊராட்சி குடிநீர் உதவியாளர் வரவழைக்கப்பட்டு, 'அனைவருக்கும் குடிநீர் வினியோகம் சீராக வழங்க உடனடி நடவடிக்கை எடுத்த நிலையில், மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

