/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை கூடுதல் கட்டடம் அமைத்து தர வலியுறுத்தல்

ADDED : பிப் 22, 2024 06:25 AM

கூடலுார்: 'கூடலுார் அருகே தரம் உயர்த்தப்பட்ட, பொன்னுார் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நிரந்தர கட்டடம் அமைத்து தர வேண்டும்,' என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார் நாடுகாணி அருகே உள்ள, பொன்னுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, 7 ஆண்டுகளுக்கு முன், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
உயர்நிலை பள்ளிக்கு சொந்த கட்டடம் இல்லாத நிலையில், ஊராட்சிக்கு சொந்தமான பள்ளி கட்டடத்தில் உள்ள, மூன்று வகுப்பறைகள் மற்றும் அலுவலகத்தில் வகுப்பறைகள் நடந்து வருகிறது. அங்கு, போதிய இட வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், 'அரசு உயர்நிலை பள்ளிக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அமைத்து தர வேண்டும்,' என, பெற்றோர் வலியுறுத்தியும், நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெற்றோர் கூறுகையில், 'பள்ளி தரம் உயர்த்தப்பட்டு, ஆறு ஆண்டுகள் ஆகியும், சொந்த கட்டடம் கட்ட நிதி ஒதுக்கவில்லை. போதிய இடவசதி இல்லாததால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
எனவே, பள்ளிக்கு தேவையான கட்டட வசதிகளை அமைத்து தர வேண்டும்,' என்றனர்.