/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுவர் இடிந்து விழுந்து சாலை துண்டிக்கும் அபாயம்
/
சுவர் இடிந்து விழுந்து சாலை துண்டிக்கும் அபாயம்
ADDED : ஜூன் 25, 2025 09:58 PM
குன்னுார்; குன்னுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு செல்லும் குறுக்குப் பாதையோர தடுப்புச்சுவர் கற்கள் இடிந்துள்ளதால் ஓட்டுப்பட்டறை சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது.
குன்னுார் ரயில் நிலையம், எஸ்.பி.ஐ., சாமண்ணா பூங்கா பகுதிகளில் இருந்து ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், கோர்ட், தபால் அலுவலகம் செல்ல முக்கிய குறுக்கு நடைபாதை உள்ளது. நாள்தோறும் இவ்வழியாக ஏராளமானோர் நடந்து சென்று வருகின்றனர்.
இந்த நடைபாதை அருகில் ஓட்டுப்பட்டறை சாலை யின் தடுப்புச்சுவர் இடைபட்ட பகுதியில் கற்கள் பெயர்ந்துள்ளன. ஏற்கனவே இதன் மீது வளர்ந்திருந்த புல் வகைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் மழை காலங்களில், தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும்.