/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை வசதிக்கு ஏங்கும் சோமரா பழங்குடியின மக்கள்: குடிநீர் குழாய் இருக்கு; காத்துதான் வருது

ADDED : ஜன 21, 2024 10:50 PM

பந்தலுார்;பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சோமரா பழங்குடியினர் கிராமத்தில் 8 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஐந்து குடிசை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.
கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலையில், ஒற்றையடி நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கிராமத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில்,, கர்ப்பிணிகள் மற்றும் நோயால் பாதிக்க பட்டவர்களை 800 மீட்டர் தொலைவிற்கு தூக்கிச் செல்ல வேண்டிய அவலம் தொடர்கிறது. வாகனங்கள் செல்ல முடியாததால் வீடுகள் கட்டும் பணிகளும் தொய்வு ஏற்பட்டு, உடைந்த குடிசை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.
மழை பெய்தால் மழைநீர் முழுவதும் வீடுகளுக்குள் சூழ்ந்து வரும் நிலையில், உறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீர் வருவதில்லை. கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும் அதிகாரிகளின் செவிகளுக்கு மட்டும் இதுவரை எட்டவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கிராமத்தை ஆய்வு செய்து முதலில் சாலை, குடிநீர் வசதி ஏற்படுத்துவதுடன் தொடர்ந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன் வர வேண்டும்.