/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீசனில் நாள்தோறும் சிறப்பு ரயில் இயக்காததால்... கடும் அதிருப்தி! முன்பதிவு முடிந்து விடுவதால் பயணிகள் ஏமாற்றம்
/
சீசனில் நாள்தோறும் சிறப்பு ரயில் இயக்காததால்... கடும் அதிருப்தி! முன்பதிவு முடிந்து விடுவதால் பயணிகள் ஏமாற்றம்
சீசனில் நாள்தோறும் சிறப்பு ரயில் இயக்காததால்... கடும் அதிருப்தி! முன்பதிவு முடிந்து விடுவதால் பயணிகள் ஏமாற்றம்
சீசனில் நாள்தோறும் சிறப்பு ரயில் இயக்காததால்... கடும் அதிருப்தி! முன்பதிவு முடிந்து விடுவதால் பயணிகள் ஏமாற்றம்
ADDED : மே 17, 2025 05:07 AM

குன்னுார்: ஊட்டி, குன்னுார் ரயில் நிலையங்கள், அமரித் பாரத் திட்டத்தின் கீழ், புதுப்பொலிவு பெற்று வரும் நிலையில், கோடை சீசனுக்கு நாள்தோறும் சிறப்பு மலை ரயில்கள் இயக்காதது, சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த, 1854ல், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை, மலை ரயில் பாதை அமைத்து, ரயில் நிலையம் கட்டப்பட்டு, 1899ல், போக்குவரத்து துவங்கியது. ஊட்டி ரயில் நிலையம், 1908ம் ஆண்டு திறக்கப்பட்டது; கடந்த, 2005ல் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது.
பல கோடி ரூபாயில் மேம்பாட்டு பணி
கடந்த 2023ல், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 'ஊட்டிக்கு, 7 கோடி ரூபாய்; குன்னுாருக்கு, 6.7 கோடி ரூபாய்; மேட்டுப்பாளையத்திற்கு, 8 கோடி ரூபாய்,' மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதில், குன்னூர் ரயில் நிலையம் பழமை மாறாமல், கூடுதல் கட்டடங்களுடன், பயணியர் விடுதி, பிளாட்பாரம், கூரைகள் புதுப்பிப்பு, பார்க்கிங், உணவருந்தும் இடம் உள்ளிட்ட பணிகள் நடந்துள்ளன.
சுற்றுலா பயணிகளை கவர தடுப்பு சுவரில் நீலகிரியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் சுவரோவியம் வரையப்படுகிறது. பழமை வாய்ந்த மரத்தை சுற்றி செல்பி ஸ்பாட் அமைத்து, வண்ண மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக பார்க்கிங் வசதிக்கு சாலை ஏற்படுத்திய 'இன்ஜினியரிங்' அலுவலக இடத்தில் தடுப்பு சுவர் அமைக்காததால், முதல், 2வது பிளாட்பாரத்தில் இருந்து வெளியேறும் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். இங்கு தடுப்பு ஏற்படுத்தி, பயணிகள் அனைவரும் ஒரே நுழைவாயிலில் வெளியேறுமாறு வழி அமைக்க வேண்டும்.
சிறப்பு ரயில் குறைவால் அதிருப்தி
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கோடை சீசனில், தினமும் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, 'சார்டட் டிரைன்' என, அழைக்கும் சிறப்பு மலை ரயிலை பலரும் வாடகைக்கு எடுத்து வருகின்றனர். கூடுதல் சிறப்பு மலை ரயில்களை இயக்க தயக்கம் காட்டும் அதிகாரிகள், தனியாருக்கு கொடுத்தால் வருமானமும் அதிகரிக்கும்.
மலை ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில்,''குன்னுார் பணிமனையில் மட்டும், 86 பேர் உட்பட, 250க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஹெரிடேஜ் மலை ரயில் இயக்கத்திற்கு, '7 டீசலில் இயங்கும் நீராவி இன்ஜின்கள்; 5 டீசல் இன்ஜின்கள்; 2 நிலக்கரி இன்ஜின்கள்,' என, மொத்தம், 14 இன்ஜின்கள், 40க்கும் மேற்பட்ட பெட்டிகள் உள்ளன. தற்போது, கோடை சீசனில் பயணம் செய்ய ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு முடிந்து விடுகிறது.
இதனை போக்க, சீசனில் நாள்தோறும் சிறப்பு மலை ரயில் இயக்க கோரி சேலம் கோட்ட பொது மேலாளருக்கு மனு அனுப்பியும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. நீலகிரி கோடை சீசன் முடியும் வரை, ஊட்டிக்கு சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.