/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் வளர்ந்து காணப்படும் மூங்கில் உடனே அகற்றினால் ஆபத்தில்லை
/
சாலையோரம் வளர்ந்து காணப்படும் மூங்கில் உடனே அகற்றினால் ஆபத்தில்லை
சாலையோரம் வளர்ந்து காணப்படும் மூங்கில் உடனே அகற்றினால் ஆபத்தில்லை
சாலையோரம் வளர்ந்து காணப்படும் மூங்கில் உடனே அகற்றினால் ஆபத்தில்லை
ADDED : பிப் 02, 2024 10:17 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே பொன்னானியில் இருந்து அம்மன்காவு வழியாக கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, நெல்லியாளம் டான்டீ பகுதிகளுக்கு செல்லும், சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையில் வனப்பகுதி அமைந்துள்ள பகுதியில், மூங்கில் மரங்கள் வளர்ந்து, சாலையின் குறுக்கே விழும் நிலையில் உள்ளது.
மின்கம்பிகள் இந்த வழியாக செல்லும் நிலையில், மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்தால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும். மேலும் போக்குவரத்து பாதிக்கப்படும்.
இதனால் சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள, மூங்கில் மரங்களை அகற்ற இப்பகுதி மக்கள், தொடர்ந்து வலியுறுத்தியும் தீர்வு காணப்படவில்லை. எனவே, ஆபத்து நிகழும் முன் இவற்றை அகற்றினால் அச்சமின்றி மக்களும், வாகனங்களும் செல்ல முடியும்.