/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கார கொல்லியில் மின்சாரம், குடிநீர் வசதி இல்லை; புதர் சூழ்ந்து காணப்படும் அரசு தொகுப்பு வீடுகள்.

ADDED : நவ 28, 2024 11:41 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, காரக்கொல்லி பகுதியில், தண்ணீர் வசதி இல்லாததால் மக்கள் குடியேறாமல், அரசு தொகுப்பு வீடுகள் புதர் சூழ்ந்து வருகிறது.
சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, காரக்கொல்லி என்ற இடத்தில், ஊராட்சி மூலம் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. மழையின் போது ஆபத்தான நிலையில் உள்ள பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு, கடந்த பல மாதங்களுக்கு முன்னர் ஒதுக்கி தரப்பட்டது. ஆனால், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி செய்து தரவில்லை.
மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்து தராததால், வீடுகள் ஒதுக்கீடு செய்தும் பயனாளிகள் குடியேற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வரும், மக்கள் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்தும், குடியேற முடியாமல் உள்ள நிலையில், இதை பற்றி ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது.
அதில், சிலர் தொகுப்பு வீடுகளை ஒட்டி, சமையலறை கட்டி வரும் நிலையில், வேறு பகுதியில் இருந்து வாகனங்களில் தண்ணீரை எடுத்து சென்று பணியாற்றி வருகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள், பயனாளிகளுக்கு, பயனில்லாமல் சிதிலமடையும் முன்பாக மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இது குறித்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் கூறுகையில்,''காரக்கொல்லி பகுதியில் இடம் மற்றும் தொகுப்பு வீடு வழங்கப்பட்டது. பயனாளிகள் சொந்தமாக விண்ணப்பம் கொடுத்து மின் இணைப்பு பெற்று கொள்ளலாம். மின் இணைப்பு கொடுத்த பின்னர், குடிநீர் இணைப்பு வழங்கப்படும்,'' என்றார்.