/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆபத்தான மின் கம்பம் அகற்றினால் அச்சமில்லை
/
ஆபத்தான மின் கம்பம் அகற்றினால் அச்சமில்லை
ADDED : அக் 29, 2025 11:31 PM

பந்தலூர்: கல்லட்டி சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலூரிலிருந்து- உப்பட்டி செல்லும் சாலையில் கல்லட்டி கிராமம் அமைந்துள்ளது. அங்கு, தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சாலையோர மின் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் சமயத்தில் மின் கம்பம் சாய்ந்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும்.
பேரிடர் காலத்தில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் இதுபோன்ற மின் கம்பங்களை அகற்றி, ஆபத்துக்களை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என, மக்கள் வலியுறுத்தியும், தீர்வு கிடைக்கவில்லை. எனவே ஆபத்து நிகழும் முன், ஆய்வு மேற்கொண்டு மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

