/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்களின் கோரிக்கை மனு வாங்க ஆள் இல்லை; நகராட்சி மீது அதிருப்தி
/
மக்களின் கோரிக்கை மனு வாங்க ஆள் இல்லை; நகராட்சி மீது அதிருப்தி
மக்களின் கோரிக்கை மனு வாங்க ஆள் இல்லை; நகராட்சி மீது அதிருப்தி
மக்களின் கோரிக்கை மனு வாங்க ஆள் இல்லை; நகராட்சி மீது அதிருப்தி
ADDED : ஜன 12, 2025 11:00 PM

பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்க வந்தபோது யாரும் இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
நெல்லியாளம் நகராட்சியில் தொண்டியாளம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்குள்ள கால்வாய்கள் திறந்த நிலையில், இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்லும் போது கால் இடறி விழுந்து, பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நல்லதங்காள் என்பவர் கால்வாயில் தவறி விழுந்து எலும்பு உடைந்து படுக்கையில் உள்ளார். சிறுவர்களும் விளையாடும் போது கால்வாயில் விழுந்த பாதிப்புகள் ஏற்படுகிறது.
அத்துடன் குடிநீர், தெரு விளக்கு வசதி இல்லாத நிலையில் கோரிக்கை குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி, ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் சுதர்சன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் நகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுக்க சென்றனர்.
ஆனால், மக்களின் மனுவை வாங்க பணி மேற்பார்வையாளர் மறுத்துவிட்ட நிலையில், மேலாளர் மற்றும் ஆணையாளர் இல்லாததால் வேறு யாரும் புகார் மனுவை வாங்கவில்லை. ஒரு மணி நேரம் காத்திருந்து அலுவலக ஊழியரிடம் மனுவை கொடுத்து திரும்பி வந்தனர்.
கலைச்செல்வி கூறுகையில், '' வெள்ளி கிழமை அங்கு சென்ற போது, எங்களின் குறைகள் அடங்கிய மனுவை வாங்க கூட ஆள் இல்லாத நிலையில், நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. கோரிக்கையை குறித்து தீர்வு கிடைக்காவிட்டால், வரும், 25 ஆம் தேதி நகராட்சி அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்படும்,' என்றார்.