/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றின் குறுக்கே புதிய இரும்புபாலம்; மக்கள் பயன்படுத்த தடை இல்லை
/
ஆற்றின் குறுக்கே புதிய இரும்புபாலம்; மக்கள் பயன்படுத்த தடை இல்லை
ஆற்றின் குறுக்கே புதிய இரும்புபாலம்; மக்கள் பயன்படுத்த தடை இல்லை
ஆற்றின் குறுக்கே புதிய இரும்புபாலம்; மக்கள் பயன்படுத்த தடை இல்லை
ADDED : செப் 18, 2025 08:47 PM

கூடலுார்; கூடலுார் புளியம்பாறை அருகே, நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே மக்கள் நடந்து செல்லும் வகையில் வனத்துறை சார்பில், புதியபாலம் அமைக்கப்பட்டது.
கூடலுார் ஆமைக்குளம் வழியாக கத்தரித்தோடு பகுதிக்கு சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே உள்ள நாரங்காகடவு ஆற்றை கடந்து செல்ல மக்கள், தற்காலிக மரப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
ஆற்றின் குறுக்கே, சிறிய வாகனங்கள் சென்று வரும் வகையில், புதிய பாலம் அமைக்க நெல்லியாளம் நகராட்சி சார்பில், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
'அப்பகுதி வனத்துறைக்கு சொந்தமானது,' எனக் கூறி, புதிய பாலம் கட்ட அனுமதி மறுத்த வனத்துறையினர், வனத்துறையின் நிதியில், 18 லட்சம் ரூபாய் செலவில் ஆற்றின் குறுக்கே, 4 அடி அகலத்தில் பாலம் அமைக்கப்படும் என, தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த மக்கள், சிறிய வாகனங்கள் சென்று வரும் வகையில் பாலம் அமைக்க, அனுமதி கேட்டு பல கட்ட போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை, 13ம் தேதி போலீசார் பாதுகாப்புடன் வனத்துறையினர் அப்பகுதியில் மக்கள், நடந்து செல்லும் வகையில் இரும்புபாலம் அமைக்கும் பணியை துவக்கினர். தற்போது, பணிகள் முடிந்து பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த பாலம் மக்கள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் சிறிய வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியில் வனத்துறை சென்று வரும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதி மக்களும் பயன்படுத்தி கொள்ளலாம்,' என்றனர்.