ஆபத்தை ஏற்படுத்தும் மின் ஒயர் அகற்றினால் ‘ஷாக்’ அபாயமில்லை
ஆபத்தை ஏற்படுத்தும் மின் ஒயர் அகற்றினால் ‘ஷாக்’ அபாயமில்லை
ADDED : ஆக 27, 2026 07:51 PM
பந்தலுார்: பந்தலுார்- கோழிக்கோடு நெடுஞ்சாலையில், மின்சார வயர்கள் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பந்தலுாரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு மற்றும் வயநாடு, உள்ளூர் கிராம பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் ஏலியாஸ் கடை சந்திப்பு பகுதியில், பகல் மற்றும் இரவு நேரங்களில் யானைகள் வந்து செல்லும், வலசை பாதைகள் அமைந்துள்ளன. இதனால், இங்கு சேரங்கோடு ஊராட்சி மூலம், தெருவிளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த வாரம் இங்கு வந்த யானை கூட்டம், தெருவிளக்கு ‘பியூஸ்’ கேரியரை உடைத்துள்ளது.
தொடர்நது, கடந்த சில நாட்களாக தரையில் கிடந்த ஒயர்களை பியூஸ் கேரியரில் இணைத்து, தரையில் வைத்துள்ளனர். இந்த வழியாக வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள், மின்சார ஒயர்களை இழுத்தால் பெரிய அளவிலான ‘ஷாக்’ அபாயம் ஏற்படும். அத்துடன் இங்கு பஸ்க்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, இதனை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
