/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழ தோட்டம் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்; புகார்கள் தெரிவித்தும் தீர்வு இல்லை

ADDED : பிப் 20, 2025 09:54 PM

குன்னுார் ; உபதலை ஊராட்சி, பழ தோட்டம் கிராம மக்களுக்கு சுகாதார மற்ற குடிநீர் வழங்குவதால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
குன்னுார் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பழத்தோட்டம் பகுதியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள நீரோடை பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவது தொடர்பாக கடந்த ஆண்டு, கிணற்று நீரின் மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 'குடிநீருக்கு இந்த நீர் பயன்படுத்துவது உகந்ததல்ல,' என, பொது சுகாதார பரிசோதனை மையமும் அறிக்கை சமர்ப்பித்தது. எனினும், இதே நீரை பயன்படுத்துவதால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
மக்கள் கூறுகையில், 'இங்கு கிணறு உள்ள இடங்களில் தேயிலை தோட்டம் இருக்கும் வரை எந்த கழிவுகளும் குடிநீரில் கலக்காமல் இருந்தது. தற்போது, தேயிலை அகற்றப்பட்டு, மாற்று விவசாயத்திற்கு பலர் மாறி விட்டனர். இதன் பிறகு குடிநீர் இதே போன்று மிகவும் மோசமான நிலையில் வினியோகிக்கப்படுகிறது. அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இப்பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து சுகாரமான குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.