/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினா் கிராமத்தில் தெருவிளக்கு இல்லை: ஒளி ஏற்றிய உள்ளூர் மக்கள்

ADDED : ஜன 04, 2024 10:53 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி, 4 வது வார்டுக்கு உட்பட்பட்ட பகுதியில் பாதிரிமூலா பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது.
இங்கு மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். கிராமத்திற்கு அடிக்கடி யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வந்து செல்கின்றன.
இதே பகுதியில் ஒரு வீட்டை யானை இரண்டு முறை சூறையாடி உள்ளது. கிராமத்தில் மின் கம்பங்கள் இருந்தும் தெரு விளக்கு அமைப்பதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
பழங்குடியின மக்கள் தங்கள் கிராமத்திற்கு தெருவிளக்கு வசதி செய்து தரக்கோரி பலமுறை புகார் கொடுத்தும், தீர்வு கிடைக்காத நிலையில், கிராம மக்கள் இணைந்து மின் கம்பத்தில், பல்பு பொருத்தி அந்த வெளிச்சத்தில் வெளியில் நடமாடி வருகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வர வேண்டியது அவசியம் ஆகும்.