/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சம்பளத்துக்கு வழியில்லை; வளர்ச்சி பணி எப்படி? அதிகாரி பேச்சால் மக்கள் அதிருப்தி

ADDED : நவ 02, 2025 10:43 PM

பந்தலூர்:  பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியில், சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை என்று தெரிவித்தது, மக்களை கடுப்படைய செய்தது.
பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி சிறப்பு கிராம சபை  கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார்.
கூட்டத்தில்  பொதுமக்கள் பேசுகையில், பிதர்காடு காமராஜ் நகர் சாலை சீரமைக்க, நிதி ஒதுக்கி,  3 ஆண்டுகள் கடந்தும், பணி துவங்க வில்லை.
தெருவிளக்கு, குடிநீ ர், நடைபாதை, தடுப்பு சுவர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர ஊராட்சி முன்வரவேண் டும் என, தெரிவித்தனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணி, ''ஊராட்சியில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை. ஊராட்சியில் போதிய நிதி இல்லை. அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே இனி வளர்ச்சி பணிகள் மேற் கொள்ள முடியும்,'' என்றார்.
ஆனால், பல்வேறு வரியினங்களை  மக்களிடம் வாங்கும் நிலையில், பணிகள் மேற்க் கொள்ளாவிட்டால் வரி கொடுப்பது வீண் என மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.