/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
/
ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
ADDED : ஜன 20, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.
ஊட்டி பழைய அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இன்று, (20ம் தேதி) ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. விழாவை ஒட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையை தொடர்ந்து, 9:00 மணிக்கு மேல் திருக்குட நன்னீராட்டு பெரு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.