/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

ADDED : ஜன 20, 2025 10:43 PM

ஊட்டி; ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஊட்டி அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டது. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ேஹாமங்கள், பூஜைகள் நடத்தப்பட்டது.
நேற்று, காலை 6:00 மணிக்கு கணபதி பூஜையை ஒட்டி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, 3:00 மணிக்கு ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து முக்கிய வீதிகளில் தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.